/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அஞ்சலகங்களில் தொழில்நுட்ப பணி ஆக.2ம் தேதி சேவை நிறுத்தம்
/
அஞ்சலகங்களில் தொழில்நுட்ப பணி ஆக.2ம் தேதி சேவை நிறுத்தம்
அஞ்சலகங்களில் தொழில்நுட்ப பணி ஆக.2ம் தேதி சேவை நிறுத்தம்
அஞ்சலகங்களில் தொழில்நுட்ப பணி ஆக.2ம் தேதி சேவை நிறுத்தம்
ADDED : ஜூலை 30, 2025 11:28 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால், வரும் 2ம் தேதி சேவை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம் மற்றும் கிளை அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பணி வரும் 2ம் தேதி நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சேவையினை, விரைவாக வழங்கும் நோக்கில் இப்பணிகள் நடைபெறுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்காக, வரும் ஆக., 2ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளாதால், சேவை இருக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இந்த குறுகிய சேவை நிறுத்தத்தின் போது, ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.