/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
ADDED : பிப் 17, 2024 04:43 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் துாக்குப்போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகள் சசிகலா, 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27; இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை மாதத்திற்கு முன் ஆண் குழுந்தை பிறந்தது. இந்நிலையில் சசிகலா, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சசிகலாவின் தாய் ராணி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடைபெற்று வருகிறது.