ADDED : பிப் 13, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 23; ேஹாட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஸ்பிளெண்டர் பைக்கில் விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்குச் சென்றார்.
குரால் கூட்ரோடு அருகே முன்னால் சென்ற நபர் மீது மோதியதில் நிலை தடுமாறி கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த கார், கிருஷ்ணமூர்த்தி மீது மோதியதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.