/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் சிலை சேதம்: போலீசார் விசாரணை
/
கோவில் சிலை சேதம்: போலீசார் விசாரணை
ADDED : டிச 25, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கடத்துார் கிராமத்தில் கோவில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து கோவில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.