/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் டெண்டர் விடும் பணி 'ஜரூர்'
/
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் டெண்டர் விடும் பணி 'ஜரூர்'
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் டெண்டர் விடும் பணி 'ஜரூர்'
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் டெண்டர் விடும் பணி 'ஜரூர்'
ADDED : மார் 09, 2024 03:18 AM
தியாகதுருகம்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் விடும் பணிகளை வேகமாக முடிக்க ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
அதன் பின் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த புதிய பணிகளுக்கும் டெண்டர் விட முடியாது. தேர்தல் முடிந்து விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னரே டெண்டர் விட முடியும்.
இந்த காரணத்தால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அரசு திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக செலவிட ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் அப்பணிகளுக்கான டெண்டர் விடும் வேலையை துவக்கி உள்ளனர்.