sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

/

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்


ADDED : ஏப் 17, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம்- பொற்படாக்குறிச்சி இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதையில், 121 கி.மீ., வேகத்தில் நேற்று ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரையில் புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 2016ல் துவங்கியது. மத்திய, மாநில அரசு பங்களிப்பில் ரூ.116 கோடி மதிப்பில் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 16 கி.மீ., தொலைவிற்கு பணிகள் துவங்கியது.

இதில், சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரையில் 12 கி.மீ., தொலைவில் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தென்னக ரயில்வே அதிகாரிகள், சென்னை ரயில்வே கட்டுமான பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில்பாதை பாதுகாப்பு குறித்து முழுமையாக 10 டிராலிகளில் சென்று நேற்று காலை ஆய்வு செய்தனர்.

உடன் சின்னசேலத்திலிருந்து சோதனை ரயிலை 100 கி.மீ., வேகத்தில் ஓட்டி பொற்படாக்குறிச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மீண்டும் சென்னை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, தலைமை நிர்வாக அதிகாரி மவுரியா, தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார்சின்ஹா, துணை தலைமை பொறியாளர் திருமால் ஆகியோர் கொண்ட பாதுகாப்பு, கட்டுமான, நிர்வாக பிரிவு அதிகாரிகள் குழுவினர் சின்னசேலம் வரை 121 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கும் என, 100 ஆண்டுகளாக காத்துக்கிடந்த இப்பகுதி மக்களுக்கு இந்த சோதனை ஓட்டம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம்


சின்னசேலம்- கள்ளக்குறிச்சி இடையிலான ரயில் பாதை திட்டம், 1920ல் அறிவிக்கப்பட்டது. 16 கி.மீ., தொலைவில் வழிப்பாதை தேர்வு செய்யப்பட்டு, கல் நடப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கான இடம், கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2016ல் பணிகள் துவங்கப்பட்ட நாளில் இதற்கான அளவீடுகள் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படும் என, இப்பகுதி மக்கள் காத்திருந்தனர்.

தற்போது பொற்படாக்குறிச்சி வரை நடத்தப்படும் சோதனை ஓட்டம் கள்ளக்குறிச்சி ரயில் நிலைய பணிகள் மேலும் தாமதமாகி விடுமோ என, மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொற்படாக்குறிச்சியில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 4 கி.மீ., தொலைவிற்கான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிப்பதுடன், கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைத்து, இங்கிருந்து திருவண்ணாலை, உளுந்துார்பேட்டைக்கு ரயில் வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us