/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்று வழங்கும் முகாம்
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்று வழங்கும் முகாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்று வழங்கும் முகாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்று வழங்கும் முகாம்
ADDED : டிச 13, 2024 10:37 PM

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமில் 55 மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு சான்றிழத் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால், சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சிறப்பு முகம் நடத்தி பொதுமக்களுக்கு மீண்டும் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சான்று மற்றும் இதர ஆவணங்கள் வழங்கு வகையில் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை என பல்வேறு சான்றிதழ் கேட்டு 55 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
இதில், பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஆர்.டி.ஓ., லுார்துசாமி சான்றிழ் வழங்கினார். நிலுவையில் உள்ள சில மனுக்களுக்கு விரைவில் உரிய சான்றுகள் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

