/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாட்கோ நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி; அரசு செயலர் பங்கேற்பு
/
தாட்கோ நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி; அரசு செயலர் பங்கேற்பு
தாட்கோ நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி; அரசு செயலர் பங்கேற்பு
தாட்கோ நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி; அரசு செயலர் பங்கேற்பு
ADDED : செப் 29, 2025 12:59 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தாட்கோ திட்டத்தின்கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சமூகப் பொருளாதார தொழில் முனைவு திட்டத்தில், ஒரு பயனாளிக்கு ரூ. 3,29,774 மானியத்துடன் ரூ.6,12,438 மதிப்பீட்டில் சுமையேற்றும் வாகனம், மற்றொரு பயனாளிக்கு ரூ.1,38,600 மானியத்துடன், ரூ.2,84,711 மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
திட்ட பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடப்பு நிதியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், பிரதமர் அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 241 பயனாளிகளுக்கு, ரூ.28.73 கோடி மானியத்துடன், ரூ.72.12 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் அதனை உரிய முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என அரசு செயலர் லட்சுமிபிரியா தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டனர்.