ADDED : செப் 28, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்க விழா நடந்தது.
தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் விஜய் மதுரையில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் ராஜவிநாயகம், மாவட்ட தொற்றா நோய் கண்காணிப்பாளர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
சார் ஆட்சியர் கார்த்திக் ராஜா தலைமை தாங்கி, பிறந்த குழந்தைகள் 25 பேருக்கு தாய் மாமன் தங்க மோதிரத்தை அணிவித்தார். நலப்பணிகள் இணை இயக்குநர் மாலினி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சங்கரன் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.
