ADDED : பிப் 01, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை சென்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்கின்றனர். இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் சின்னசேலம் வழியாக காவடி எடுத்து பாத யாத்திரையாக சென்றனர். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
