ADDED : மார் 13, 2026 06:00 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: மார்ச் 13-: திருக்கோவிலுார் அடுத்த தகடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கனகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தியாகுசிங்கராயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர்.
பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தன்னார்வலர் அய்யப்பன் மாணவர்களுக்கான பரிசு பொருட்களை வழங்கி உதவினார். மாணவர் சேர்க்கையும் துவக்கி வைக்கப்பட்டது.
