/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாயுமானவன் திட்டம் : விரியூரில் துவக்கம்
/
தாயுமானவன் திட்டம் : விரியூரில் துவக்கம்
ADDED : ஆக 15, 2025 10:48 PM

சங்கராபுரம், ; முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவன் திட்ட துவக்க விழா விரியூர் கிராமத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், பொது விநியோக திட்ட பதிவாளர் மணிகண்டன், கள அலுவலர் கமலக்கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் திருமலை முன்னிலை வகித்தனர்.
முகாமை தலைமை தாங்கி துவக்கி வைத்த உதயசூரியன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'முதல்வர் சிறப்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்காக கல்வராயன்மலை பகுதியில் போக்குவரத்து பணிமனை மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைத்து கொடுக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு வழிகாட்டுதலோடு முன்மொழிவு பெறப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
விழாவில் அனைத்து துறை அலுவலர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

