/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் கம்பு சாகுபடி பரப்பு குறைந்தது
/
மாவட்டத்தில் கம்பு சாகுபடி பரப்பு குறைந்தது
ADDED : செப் 11, 2025 11:01 PM
தியாகதுருகம்; மக்காச்சோளம், உளுந்து சாகுபடி பரப்பு அதிகரித்த காரணமாக கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
சிறுதானியங்களில் கம்புக்கு முக்கிய இடம் உள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் கூழ், புட்டு ஆகியவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கம்பு தானியத்தை கொண்டு செய்த உணவை விரும்பி சாப்பிடுகின்றனர்.
குறிப்பாக நாட்டு கம்பில் தயாரிக்கப்படும் கூழ் விற்பனை கன ஜோராக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி பட்டத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு சாகுபடி செய்வது வழக்கம். தென்மேற்கு பருவ மழை ஈரத்தைக் கொண்டு விளைந்து பலன் தரும். கடந்த சில ஆண்டுகளாக கம்புக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை. பெரும்பாலும் கால்நடை மற்றும் கோழி தீவனங்களுக்கு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
இதுவரை கம்பு அறுவடை ஆட்களைக் கொண்டு நடப்பதால், செலவு அதிகரித்து பலரும் கம்பு சாகுபடி செய்வதை தவிர்த்து மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி மட்டுமே செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து பயிரிடுவது அதிகரித்ததன் காரணமாக கம்பு சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துவிட்டது.