/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளர்
/
வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளர்
ADDED : டிச 18, 2024 02:57 AM
கச்சிராயபாளையம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, 39; இரு ஆண்டுகளாக வடக்கனந்தல் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் வடக்கனந்தலை சேர்ந்த சங்கீதா, 39; கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் மதியம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சங்கீதா, வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு கணக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். தமிழரசி அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் அலுவலகம் வந்த சங்கீதா அலுவலகத்தை திறந்து விட்டுள்ளார்.
இதனை தமிழரசி வீடியோ பதிவு செய்து வெளியிட்டது வைரலானது.