/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
/
பா.ஜ., சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டையில், ரிஷிவந்தியம், வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பார்த்திபன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில துணைத் தலைவர் சம்பத் பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், நிர்வாகிகள் செந்தில்குமார், வெங்கடேசன், ஜெயதுரை, சுரேஷ், ஏழுமலை, ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.