/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
ADDED : அக் 01, 2024 06:59 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் அருள், 6; இவரது பெற்றோர் ஊர் ஊராகச் சென்று ஈயம் பூசம் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் திருக்கோவிலுார் அடுத்த கோமாலுார் கிராமத்தில் தங்கி ஈயம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் 1:00 மணியளவில் அருகில் இருக்கும் கிணற்றில் மீன்பிடிக்கச் சென்ற அருள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
திருக்கோவிலுார் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து, சிறுவன் உடலை மீட்டனர்.
திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.