/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடுத்தவர் நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் மீது வழக்கு வடபொன்பரப்பியில் பரபரப்பு

ADDED : செப் 23, 2024 06:09 AM
மூங்கில்துறைப்பட்டு : போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் செந்தில்,35; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக, கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன் பேரில், சார் பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் சேட்டு, சேகர் மற்றும் குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஏழுமலை, மெய்யப்பன், கண்ணு, அருணகிரி மனைவி முனியம்மாள், அய்யப்பன், ஜெய்சங்கர், சக்கரை ஆகிய 10 பேர் மீது போலி பத்திரம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.