/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் சராசரியாக 15.39 மி.மீ., மழை பதிவு
/
மாவட்டத்தில் சராசரியாக 15.39 மி.மீ., மழை பதிவு
ADDED : செப் 23, 2024 08:00 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 15.39 மி.மீ., மழை பதிவானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 24, தியாகதுருகம் 32, விருகாவூர் 40, கச்சிராயபாளையம் 29, கோமுகி அணை 25, மூரார்பாளையம் 9, வடசிறுவள்ளூர் 10, கடுவனுார் 19, அரியலுார் 14, சூளாங்குறிச்சி 31, ரிஷிவந்தியம் 10, கீழ்ப்பாடி 12, மணிமுக்தா அணை 19 மி.மீ., வாணாபுரம் 15, திருக்கோவிலுார் 10, யு.கீரனுார் 25 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது. மாவட்டம் முழுதும் 369.40 மி.மீ., மழை பெய்த நிலையில், சராசரியாக 15.39 மி.மீ., பதிவானது.