ADDED : ஜூன் 02, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார்மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நேற்று சிவபெருமானுக்கு உகந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி, பன்னிரு சைவ திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதில் உள்ள 658 பாடல்களை ஓதுவார்கள் அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து படித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.