/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சேர தேர்வு போட்டி 28 ல் நடக்கிறது
/
தேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சேர தேர்வு போட்டி 28 ல் நடக்கிறது
தேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சேர தேர்வு போட்டி 28 ல் நடக்கிறது
தேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சேர தேர்வு போட்டி 28 ல் நடக்கிறது
ADDED : ஏப் 16, 2025 11:53 PM
கள்ளக்குறிச்சி; தேக்வாண்டோ ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சேருவதற்கான தேர்வு போட்டி வரும் 28ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேக்வோண்டோ ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் செயல்படுகிறது. இதில் தேக்வாண்டோ விளையாட்டிற்கு 12-21 வயது வரை உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வு செவதற்கான போட்டி வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும். மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள பயணச் செலவு வழங்கப்படும்.
தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகள் ஆதார் கார்டு, பிறப்பு சான்று, அடையாள அட்டை நகல்கள் கொண்டு வர வேண்டும். தேர்வு போட்டிக்கு வரும்போது விளையாட்டு சீருடையுடன் வர வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் அலுவலரை 7401703474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஸ்டார் அகாடமி விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான தேர்வு போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.