/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு வரும் 21ம் தேதி தேர்வு
/
மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு வரும் 21ம் தேதி தேர்வு
மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு வரும் 21ம் தேதி தேர்வு
மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு வரும் 21ம் தேதி தேர்வு
ADDED : டிச 18, 2024 07:52 AM
கள்ளக்குறிச்சி : மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வு போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., ஆசிரியர்களுக்கு, மாநில அளவிலான வினாடி வினா போட்டி வரும் 28ம் தேதி நடக்கிறது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் 9 போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி வரும் 21ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டி 50 வினாக்கள் கொண்ட எழுத்துத் தேர்வு ஆகும்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://forms.gle/DDwVW888xpcWtriC8 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
போட்டி நடைபெறும் மையத்தில் பங்கேற்பவர்கள் தங்களது அலுவலக, பள்ளி அடையாள அட்டையை தேர்வு மைய அறை கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். எழுத்து தேர்வில் முதல் 9 இடங்களைப் பெற்றவர்கள் 3 பேர் கொண்ட 3 குழுக்களாக மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
விண்ணப்பித்த போட்டியாளர்களுக்கு பதிவு எண் விரைவில் பகிரப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.