நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி.
இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது வீட்டில் ,நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன், இந்த கடிதம் கிடைக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.