/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் இருந்த நகை, பணம் அபேஸ் உளுந்துார்பேட்டையில் துணிகரம்
/
பைக்கில் இருந்த நகை, பணம் அபேஸ் உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பைக்கில் இருந்த நகை, பணம் அபேஸ் உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பைக்கில் இருந்த நகை, பணம் அபேஸ் உளுந்துார்பேட்டையில் துணிகரம்
ADDED : பிப் 18, 2024 12:23 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பட்டப்பகலில் 92 ஆயிரம் ரூபாய், 2 சவரன் நகையை அபேஸ் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பச்சைவெளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 43; வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் உளுந்துார்பேட்டையில் அடகு வைத்திருந்த 2 சவரன் நகையை மீட்டார்.
நகையுடன், 92 ஆயிரம் ரூபாயையும் பைக் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு, உளுந்துார்பேட்டை உழவர் சந்தை அருகே பைக்கை நிறுத்தி விட்டு கடையில் தண்ணீர் பாட்டல் வாங்கச் சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது, பைக் டேங்க் கவரில் வைத்திருந்த நகையும், பணமும் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது. வழக்குப் பதிந்து ஹெல்மெட் ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.