நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மேலுார் காட்டுக்கொட்டாய் சேர்ந்த தேவராஜ் மகள் பூங்கொடி,17; இவர் கடந்த 28 ம் தேதி மாலை 4 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

