/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : நவ 03, 2024 11:19 PM
சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி அஞ்சலை, 60; இவர் அவ்வப்போது ஆத்துார் பகுதியில் தங்கியுள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 7:00 மணியளவில் அஞ்சலையின் அக்கா வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.
தகவலறிந்த அஞ்சலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 4 கிராம் தோடு, 300 கிராம் வெள்ளி விளக்கு, தட்டு மற்றும் அரைஞான்கயிறு, எல்.இ.டி., டிவி மற்றும் ரூ 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.