ADDED : ஜன 19, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே முன்விரோத தகராறில் லாரி டிரைவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, 43; லாரி டிரைவர்.
இவர் கடந்த 14ம் தேதி காலை வீட்டில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த முருகேசன், 65; என்பவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனர்.