/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீராத பிரச்னையாக தொடரும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி, காவல் துறையினர்
/
தீராத பிரச்னையாக தொடரும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி, காவல் துறையினர்
தீராத பிரச்னையாக தொடரும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி, காவல் துறையினர்
தீராத பிரச்னையாக தொடரும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி, காவல் துறையினர்
ADDED : பிப் 20, 2024 11:36 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் எப்போது பார்த்தாலும் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
பஸ் நிலையதைச் சுற்றிலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. கடைகள் வைத்திருப்பவர்கள் நடைபாதையை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து விஸ்தரிப்பு செய்துள்ளனர். சில கடைக்காரர்கள் பயணிகள் அமருவதற்கு அமைத்துள்ள சிமென்ட் கட்டை இருக்கையை ஆக்கிரமித்துள்ளனர்.
பஸ் நிலைய ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் எழும்போது மட்டும் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். இருப்பினும் தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் ஒரு சில நாட்களில் பழைய நிலைக்கு மாறிவிடுகிறது.
அதேபோல் பஸ் நிலைய மையப்பகுதி மற்றும் குறுகிய பகுதியான பஸ்கள் வெளியே செல்லும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து பூ, காய்கறி, பழம், கீரைகள் என பல்வேறு கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே பஸ்கள் வெளியே செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அகற்றுவதற்கு பதில், அவர்களுக்கு சாதகமாக பேரிகார்டு வைத்து நெரிசலுக்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளனர்.
பஸ் நிலைய கடைகள் விதிமுறை மீறி, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்காலிக கடைக்காரர்களும் வழியை அடைத்தபடி கூடுதலான ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
தீராத பிரச்சனையாக இருக்கும் பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

