ADDED : மார் 28, 2025 05:40 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரத்தை சேர்ந்தவர் ராசேந்திரன் 65. இவர் கடந்த ஓராண்டாக மகள் தீபா வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 5,ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், விசாரிக்கின்றனர்.
