ADDED : ஜூலை 29, 2025 10:24 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் மனோகரன், 73; ஓய்வு பெற்ற நீதிமன்ற தலைமை எழுத்தர்.
திருப்பதி செல்வது தொடர்பாக மனைவியுடன் மனோகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி பைக்கில் புறப்பட்டு சென்ற மனோகரன் வீடு திரும்பவில்லை. மாயமான மனோகரை கண்டுபிடித்து தர கோரி அவரது உறவினர் வினோத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
