
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூதாட்டி பலி
கள்ளக்குறிச்சி அருகே, கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனமயில், 72. இவர் கணவர் இறந்த நிலையில், கூரை வீட்டில் தனியாக வசித்தார். கடந்த இரு நாட்களாக, பலத்த மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு கூரை வீடு இடிந்து விழுந்தது. இதில் வனமயில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர்.