/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து
/
ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து
ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து
ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து
ADDED : டிச 29, 2024 11:05 PM
ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். வியாபாரம், வேலைவாய்ப்பு மற்றும் திருமணத்திற்கு புன்னிய ஸ்தலமாக உள்ள இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிந்து தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அன்றைய தினம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். பலர் விடிய, விடிய வரிசையில் காத்திருந்து, அதிகாலையில் அரங்கநாத பெருமாளை தரிசிப்பது வழக்கம். தற்போது பழமை மாறாமல் கோவில் புதுப்பிக்கும் பணி நடப்பதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறாது.
ஆனால், பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக உற்சவர் அரங்கநாத பெருமாளை மண்டபத்தில் எழுந்தருள செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.