/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு கோவில்களில் உண்டியல் உடைப்பு காணிக்கை திருடிய நபர்களுக்கு வலை கச்சிராயபாளையத்தில் துணிகரம்

ADDED : ஆக 11, 2025 06:49 AM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து பூசாரி பூங்கொடி,60; கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறந்த போது, உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உண்டியலில் ரூ. 30 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் ராஜவேல் தடயங்களை சேகரித்தார். இது குறித்து கோவில் நிர்வாகி பாலு, 63; அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு திருட்டு கச்சிராயப்பாளையம் அடுத்த ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தில் கோமுகி ஆற்றங்கரை ஓரமாக நல்லதங்காள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூஜைகள் முடிந்த பூட்டப்பட்டது. நேற்று காலை பூசாரி பழனி கோவிலை திறந்தபோது, மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ. 20 ஆயிரம் காணிக்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா பன்னீர், 60; அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.