/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : பிப் 15, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சேவியப்பன் மகன் செந்தில்குமார்,52; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர். இவர் கடந்த 12ம் தேதி இரவு 7:45 மணியளவில் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.
அண்ணா நகர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, மோ.வன்னஞ்சூர் பெரியசாமி மகன் செல்வகுமார்,40; வழிமறித்து செந்தில்குமாரை ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை கைது செய்தனர்.

