/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் திறந்து விடும் அவலம்
/
செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் திறந்து விடும் அவலம்
செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் திறந்து விடும் அவலம்
செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் திறந்து விடும் அவலம்
ADDED : மார் 18, 2025 03:58 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கழிவு நீர் கால்வாய்களில் குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். அலுவல் பணி மற்றும் கல்வி தேவைகளுக்காக இங்கு நாள்தோறும் குடியேறும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
மேலும் பல்வேறு பணிகள் காரணமாகவும், பள்ளிகள், கல்லுாரிகள், குடியிப்புகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வதற்காக இங்கு நாள்தோறும் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நகரின் உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்படாததால் அசுர கதியில் விரிவாக்கம் பெற்று வரும் நகரப்பகுதியில் ஏராளமான பிரச்னைகள் நீடித்து வருகிறது.
பெரும்பாலான சாலையோர குடியிருப்புகளின் செப்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவதை மேற்கொள்ளாமல், அதனை கழிவுநீர் கால்வாயகளில் திறந்து விடும் அவல நிலை இப்பகுதியில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிளில் துர்நாற்றம் வீசுவது தடுக்க முடியாமல் போகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையும் நீடித்துவருகிறுது. எனவே, நகரப்பகுதியில் கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து விடுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.