/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூரை வீடு எரிந்து ரூ. 2 லட்சம் சேதம்
/
கூரை வீடு எரிந்து ரூ. 2 லட்சம் சேதம்
ADDED : பிப் 15, 2024 06:50 AM
உளுந்துார்பேட்டை, : சமையல் செய்தபோது, கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
உளுந்துார்பேட்டை, திருநாவலுார் அடுத்த மேட்டத்துாரை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி செல்வி,30; இவர் நேற்று மதியம் 3:30 மணியளவில் வீட்டில் சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது தீ பரவி, வீட்டின் கூரை பற்றி எரிந்தது. திடுக்கிட்ட செல்வி அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.
தகவலறிந்த திருநாவலுார் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும், அதற்குள் வீட்டில் இருந்த துணி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

