/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணையில் மீன் விற்பனை அமோகம்
/
கோமுகி அணையில் மீன் விற்பனை அமோகம்
ADDED : பிப் 01, 2024 06:21 AM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் மீன் விற்பனை நடந்து வருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணையின் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் ஆதாரம் பெறுகின்றன. மேலும் அணையில் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் ஆண்டுதோறும் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பருவ மழை காலத்தின் போது கோமுகி அணையில் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் கட்லா, ரோகு, ஜிலேபி, மிர்கால், கெண்டை போன்ற பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது கோமுகி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து தினமும் மீனவர்கள் அணையிலிருந்து மீன்களைப் பிடித்து கூட்டுறவு சங்கம் மூலம் அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர்.
கோமுகி அணையில் அவ்வப்போது மீன்களைப் பிடித்து உயிருடன் விற்பனை செய்வதால் டேம் மீன்களுக்கு பொதுமக்களிடையே அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.