/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வைக்கோல் தீ பிடித்து எரிந்து சேதம்
/
வைக்கோல் தீ பிடித்து எரிந்து சேதம்
ADDED : ஜூலை 15, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே டிராக்டரில் ஏற்றிச் சென்ற வைக்கோல் தீ பிடித்து எரிந்து சேதமானது.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் நேற்று வயலில் அறுவடை செய்த வைக்கோலை டிராக்டரில் ஏற்றி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் மின்கம்பியில் உராசி வைக்கோல் தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று தீயை அணைத்தனர். இதில் 15 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதமானது.