/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டிக்கு பொருட்கள் வரத்து முற்றிலும் குறைந்தது
/
மார்க்கெட் கமிட்டிக்கு பொருட்கள் வரத்து முற்றிலும் குறைந்தது
மார்க்கெட் கமிட்டிக்கு பொருட்கள் வரத்து முற்றிலும் குறைந்தது
மார்க்கெட் கமிட்டிக்கு பொருட்கள் வரத்து முற்றிலும் குறைந்தது
ADDED : டிச 05, 2025 05:37 AM
திருக்கோவிலுார்: தொடர் மழையின் காரணமாக அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கான விளைபொருட்களின் வரத்து நேற்று முற்றிலும் தடைபட்டது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியில் முன்னிலை வகிப்பது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கமிட்டிக்கான விளை பொருட்களின் வரத்து குறைந்திருந்தது.
நேற்று பொருட்கள் ஏதும் ஏலத்திற்கு வரப்படாததால் கமிட்டி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று அரகண்டநல்லுார் மற்றும் திருக்கோவிலுாரின் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விலகி, தெளிவான வானிலை காணப்பட்டதால் வரும் நாட்களில் கமிட்டிக்கான வரத்து அதிகரிக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.