/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்தமிழ் சங்க முப்பெரும் விழா
/
முத்தமிழ் சங்க முப்பெரும் விழா
ADDED : ஜூன் 27, 2025 12:21 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம்; பள்ளி மாணவர்கள் எழுதிய 'எண்ணங்களும் வண்ணங்களும்' புத்தக வெளியீட்டு விழா; பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா; ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
முத்தமிழ் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, முத்தமிழ் சங்க பொருளாளர் அம்பேத்கர், அண்ணாமலை, குசேலன், தாமோதரன் முன்னிலை வகித்தனர். முத்தமிழ் சங்க தலைவர் முருக குமார் வரவேற்றார்.
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் குறித்து முத்துக்கருப்பன் பேசினார். பள்ளி மாணவர்கள் எழுதிய, 'எண்ணங்களும் வண்ணங்களும்' புத்தகத்தை தொகுப்பு ஆசிரியர் தாமோதரன் முன்னிலையில் கோமுகி மணியன் வெளியிட்டார்.
தொடர்ந்து, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வில், முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு முத்தமிழ் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லட்சுமி, சண்முகம் பிச்சப்பிள்ளை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.