/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்பெண்ணையில் பிரியும் திருக்கோவிலுார் ஏரி வாய்க்கால் சேதம்! மாவட்ட நிர்வாகம் கணக்கெடுக்காததால் விவசாயிகள் அதிருப்தி

ADDED : டிச 23, 2024 11:13 PM

திருக்கோவிலூர் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் நேரடியாக பயன் பெறுகிறது. ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் கச்சிகுச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் என 7க் கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
இதற்கான ஆற்று வாய்க்கால் முடியனூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி, 7 கி.மீ., பயணிக்கிறது. மழைக்காலங்களில் தகடி பகுதியில் இருந்து உருவாகி வரும் ஓடை நீரும் திருக்கோவிலூர் வாய்க்காலில் கலக்கும்.
சமீபத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில், ஏரி வாய்க்காலில் 3 கிமீ., தூரத்திற்கு மணல் முடியும், வாய்க்காலின் கருங்கல் கல்வெட்டுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. முடியனுர் ஓடை தண்ணீரும் திருக்கோவிலுார் ஏரிக்கு வராத சூழலில், வழக்கத்திற்கு மாறாக ஓடை நீர் திருக்கோவிலூர் ஏரி வாய்க்கால் வழியாக மேற்கு நோக்கி பயணித்து, தென்பெண்ணை ஆற்றில் வீணாகி வருகிறது.
இதேபோல் விளந்தை, கழுமரம், தகடி, முடியனுர் என பத்திற்கும் மேற்பட்ட ஏரிவாய்க்கால்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவு எட்டியிருக்கும் சூழலில், இரண்டாம் போக சாகுபடிக்காக, இரண்டு கட்டங்களாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
அவ்வாறு திறந்தால் தண்ணீர் ஏரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
நீர்வளத்துறையோ, மாவட்ட வருவாய்த் துறையோ ஏரிவாய்க்கால் வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை கணக்கிடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் விவசாயிகள். நீர்வளத் துறை மூலம் சம்மந்தப்பட்ட ஏரி வாய்க்கால்களை குறிப்பாக திருக்கோவிலூர் பெரிய ஏரிவாய்க்காலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து, தாமதப்படுத்தாமல் வாய்க்கால்களை சீரமைப்பது அவசர அவசியமாகும்.