/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேவபாண்டலத்தில் முப்பெரும் விழா
/
தேவபாண்டலத்தில் முப்பெரும் விழா
ADDED : ஜூன் 21, 2025 03:48 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது.
ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சங்க காப்பாளர் கோமுகிமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி, அண்ணாமலை, முத்துக்கருப்பன், குசேலன், தாமோதரன், தொழிலதிபர் கதிரவன், ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் முருககுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கடந்த கல்வியாண்டில் நடந்த 10, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். சங்கராபுரம் மனவளக்கலை மன்ற தலைவர் முருகன் தலைமையில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர் கார்த்தி நன்றி கூறினார்.