
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா நடந்தது.
உலக அறிவியல் தினம், உலக கருணை தினம், இலக்கிய சொற்பொழிவு ஆகிய முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் வேலு தலைமை தாங்கினார். ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், பொது சேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன், ஓய்வூதியர் சங்க துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
வடசெட்டியந்தல் தொடக்கப் பள்ளி மாணவர்களின் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. உலக அறிவியல் தினம், உலக கருணை தினம் குறித்து ஆசிரியர்கள் விரன், பாரதி கிருஷ்ணன் பேசினர். சிறப்பாக பேசிய பள்ளி மாணவி, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பொருளாளர் ஆண்டப்பன் நன்றி கூறினார்.

