தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா


UPDATED : மே 01, 2026 06:16 AM

ADDED : ஏப் 30, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 06:16 AM ADDED : ஏப் 30, 2026 02:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கம் சார்பில் அம்பேத்கர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழா நடந்தது.

ரிஷிவந்தியத்தில் நடந்த விழாவிற்கு தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர்கள் சிவமுருகன், மணிரத்னம், சங்க துணைத்தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். நிறுவனர் ராஜகோபால் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், நாலடியார் ஒரு பார்வை தலைப்பில் ஜெயராமன், அம்பேத்கரின் அரசியல் சட்டம் என்னும் தலைப்பில் செல்லமுத்து, பாரதிதாசனின் பண்முகப்பார்வை என்ற தலைப்பில் ஸ்ரீதரன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்கள் என்ற தலைப்பில் தியாகதுருகம் பாரதியார் தமிழ்சங்க தலைவர் துரைமுருகன், பாரதிதாசனின் பெண்ணியம் என்ற தலைப்பில் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, திருக்குள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சு போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ராணுவ அலுவலர் செல்வராஜ், புரவலர்கள் சீனு, முரளி, விஜயகுமாரி, கிட்டப்பா, விஜயகுமார், ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us