ADDED : ஆக 18, 2026 04:17 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா, பொது சேவை அமைப்பு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, இலக்கிய சொற்பொழிவு ஆகியமுப்பெரும் விழா நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சந்திரசேகரன், பழனிசாமி, தங்கமணி முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பேருராட்சி தலைவர் ரோஜாரமணி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
ஆசிரியர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் முழு அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. போதை பழக்கத்திற்கு எதிராக அனைவரும் உறுதிமொழியேற்றனர்.
கேரி பேக் தவிர்ப்பு, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து சங்கை தமிழ்ச் சங்க செயலாளர் லட்சுமிபதி சிறப்புரையாற்றினார்.
2026-27ம் ஆண்டிற்கான புதிய பொது சேவை அமைப்பு நிர்வாகிகள்,இன்னர்வீல் கிளப் தலைவி கீதாமுருகன் மற்றும் நிர்வாகிகள், வாசவி கிளப் ரவிச்சந்திரன், டவுன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பாண்டலம் கோவில் நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.வள்ளலார் மன்ற அன்னதான பயன்பாட்டிற்காக கல்யாணி முத்துக்கருப்பன் பாத்திரங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, விஜயகுமார், குசேலன், சங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பராயன், கள்ளக்குறிச்சி நகரத்தார் சங்க செயலாளர் அருண், தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், சித்தார்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
