/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
/
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஜன 16, 2024 06:26 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், 42; இவர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்றார். உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் அருகே ரயில் சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்து சுந்தரபாண்டியன் இறந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுந்தரபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.