/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
/
கள்ளக்குறிச்சியில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கள்ளக்குறிச்சியில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கள்ளக்குறிச்சியில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
ADDED : அக் 20, 2024 04:49 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியில் இருந்து 11:00 மணி வரை பரவலாக மழை பெய்தது.
இதில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பெய்த மழையால் பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றது. விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த அன்வர்பாஷா, 60; என்பவரது பூட்டியிருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
கச்சிராயபாளையத்தில் பெட்டி கடை நடத்தி வரும் அன்வர்பாஷா வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் விழுந்ததால், உயிர்சேதம் ஏதுமில்லை.
சங்கராபுரம்
சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், வயதானவர்கள் உள்ளிட்ட பலர் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் சங்கராபுரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.