/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
110 அடியை தாண்டியது சாத்தனுார் அணை நீர்மட்டம்
/
110 அடியை தாண்டியது சாத்தனுார் அணை நீர்மட்டம்
ADDED : ஆக 18, 2025 04:10 AM
திருக்கோவிலுார்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது.
இது மட்டுமின்றி மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பெருமளவில் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையின் உயரம் 119 அடி (7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு). தற்பொழுது 110.55 அடி (5,540 மில்லியன் கன அடி நீர்) தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 336 கன அடி நீர் வந்து உள்ளது.
அணையின் மேற்புறம் உள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நி ரம்பியுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் சூழல் உருவாகி உள்ளது.