குடிநீர் பிரச்னையை தீர்க்க கிணறு காட்சிப்பொருளான அவலம்
குடிநீர் பிரச்னையை தீர்க்க கிணறு காட்சிப்பொருளான அவலம்
ADDED : செப் 10, 2026 07:03 PM

அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே புதிதாக வெட்டப்பட்ட கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்ததால் பொதுமக்கள் கோரிக்கையையேற்று, அப்பகுதி ஏரியில் பெரிய கிணறு வெட்டப்பட்டது.
கிணறு வெட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் மோட்டார் பொருத்தி பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்ல இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கிணறு வெட்டியும் மங்கலம் கிராம மக்கள் இன்னமும் குடிநீருக்காக தினமும் அல்லாடி வருகின்றனர்.
எனவே, புதிய கிணற்றில் மோட்டார் பொருத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
