நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே, மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் ராஜதுரை மகள் சிவரஞ்சினி,21; டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு வீட்டிலேயே வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 19ம் தேதி உறவினர் வீட்டில் நடந்த சுபகாரியத்தில் பங்கேற்க, இவரது குடும்பத்தினர் சென்றனர். தொடர்ந்து, சில மணிநேரங்களுக்கு பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சிவரஞ்சினி இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர்.
பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க இயலவில்லை. மேலும், வீட்டிலிருந்த 10 சவரன், ரூ.30 ஆயிரம் மற்றும் அவரது கல்வி சான்றிதழ்களையும் காணவில்லை.
இது குறித்து, அவரது தாய் ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.