ADDED : ஏப் 08, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்;பெரம்லுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சரண்யா, 37; இவர் கூகியூர் ஆற்று பாலம் அருகே உழவர் நிலையம் என்ற அக்ரோ சென்டர் நடத்தி வருகிறார்.
அருகே, திட்டக்குடி வட்டம், ஆவட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரூபாராம், 52; நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது மருந்து கடையில் இருந்த 5,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. நகை அடகு கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருடு போகவில்லை.
கீழ்க்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.